அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிக்கு கவிதாஞ்சலி
(அஞ்சலி..)
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி அணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி
(பூவே..)
சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கழிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி
(பூவே..)
(அஞ்சலி..)
அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கௌவாகி மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
(பூவே..)
படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Thursday, December 6, 2007
72. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...
பதிந்தவர் MyFriend @ 2:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அழகான மெலோடி மனதை சுண்டி இழுக்கும் மெட்டு கொண்ட பாடல். வாழ்த்துக்கள். எனக்கும் அழைப்பிதழ் அனுப்பலாமே? ஏதோ என் பங்குக்கும் போடறேனே? அனுப்பறீங்களா?....நண்பர்களே.
அழகான மெலோடி மனதை சுண்டி இழுக்கும் மெட்டு கொண்ட பாடல். வாழ்த்துக்கள்.
எனக்கும் அழைப்பிதழ் அனுப்பலாமே அக்கா/மாமா, ஏதோ என் பங்குக்கு மராத்தி பாட்டு, தெலுங்கு பாட்டு, ஹிந்தி பாட்டு, கன்னட பாட்டு எல்லாம் போடுவேன்ல.
Post a Comment