Saturday, December 1, 2007

45. நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்...



நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியல்
நீ பதறாதே..
நீ சிதறாதே..

நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போல ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்
ஒன்றாக சாதிப்போம்
ஒரு நாளில் சந்திப்போம்
ஒன்றாக சாதிப்போம்
ஒரு நாளில் சந்திப்போம்
சந்திப்போம்..
(நண்பா..)

எந்த பந்தம் இல்லாமல்
ரத்த சொந்தம் இல்லாமல்
இதயங்கள் இன்று பிரிகின்ற போது
நெஞ்சில் வலிகள் கொண்டோமே
நட்பு என்ற வார்த்தைக்குள்
ரெண்டு அர்த்தம் இங்குண்டு
தன்நலமின்மை உயிர்தரும் உண்மை
நட்பில் ஒன்றாய் வாழ்ந்தோமே
நட்பெனும் சொந்தம் உயிரினை போலே
கடவுளை விடவும் ஒரு படி மேலே
எங்கோ பிறந்தோமே
அட எங்கோ வளர்ந்தோமே
இங்கே இணைந்தோமே
இரு இதயம் நனைந்தோமே
(நம்மை நாமே..)
(நண்பா..)
(நண்பா..)

காத்திருக்கக் கற்றுக்கொள்
காலம் போகும் ஏற்றுக்கொள்
ஒரு பிடி வைரம் உருப்பெறும் நேரம்
நூறு நூறு வருடங்கள்
ஊசி வந்து உயிர் தொட்டு
பாடல் பாடும் இசைத்தட்டு
வலிகளை தாங்கி வடுக்களை வாங்கி
அக்கினிகொஞ்சாய் போராடு
ஓய்ந்துவிடாதே நீ ஒரு காற்று
தளர்ந்துவிடாதே நம்பிக்கை ஏற்று
விதைகள் கிழியாமல் சிறு துயிரும் தோன்றாது
கப்பல்தான் நிக்கும் கடல் அலைகள் நிக்காது
(நம்மை நாமே..)

படம்: பிப்ரவரி 14
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: கார்த்திக், பரத்வாஜ், ஜனனி பரத்வாஜ்

2 Comments:

MyFriend said...

//நட்பு என்ற வார்த்தைக்குள்
ரெண்டு அர்த்தம் இங்குண்டு
தன்நலமின்மை உயிர்தரும் உண்மை///

உண்மை உண்மை. :-)

ரசிகன் said...

// தன்நலமின்மை உயிர்தரும் உண்மை//உண்மை உண்மை. :-)//

அதானே.. உயிரெடுக்காம விடமாட்டிங்களே..
பாட்டு நல்லாயிருக்கு..படிச்சுட்டேன் (இன்னும் கேக்கலை.கேட்டுப்புட்டு சொல்லறேன்.):

Last 25 songs posted in Thenkinnam