Wednesday, December 5, 2007

66. தாய் சொல்லும் உறவை வைத்தே...



தாய் சொல்லும் உறவை வைத்தே உலகம் சொந்தம்
தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம்
(தாய்..)
17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே
பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்
கடலோர உப்பங்கழியும் காதோடு பேசும் அலையும்
500 மயில் போனாலும் தேடி வரும்
(தாய்..)

கிராமம் தன் மடியில கட்டி வளர்த்தது உன்னை
கிராமத்தை மடியில கட்டி போவது என்ன
சாதி தாண்டியே நட்பும் உறவும் மலர்ந்தது அங்கே
சமயாத பெண்கள் பார்த்து மயங்கியது அங்கே
உப்பு மேட்டிலே ஆடி முடித்து சாய்ந்ததும் அங்கே
ஆகாயம் இருட்டில் போர்த்தி தூங்கியது அங்கே
கையோடு அள்ளிய தண்ணீ விரலோடு கசிவது போல
கண்ணோடு நினைவுகள் எல்லாம் கசிகிறதே
(தாய்..)

நெல்லிக்காய் அடியில் உள்ள தித்திப்பாக
வறுமையில் கீழ் லட்சியம் ஒன்று வந்தது அங்கே
தூக்கு வாளி தலையில் மாட்டி கிரீடம் என்றாய்
சொந்த செலவில் சூரியன் வாங்க ஆசை கொண்டாய்
சொந்த உறவுகள் இலைகளை போல உதிர்ந்திட கண்டாய்
வந்த உறவுகள் வளர்பிறையாக வளர்ந்திட கண்டாய்
மனம் கொண்ட கனவுகள் எல்லாம் மண் பானை சிமிழுகள் ஆக
மறு வாழ்வின் வெற்றியை தேடி ஓடுகிறாய்
(தாய்..)

படம்: கனா கண்டேன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மாணிக்க விநாயகம்

3 Comments:

குட்டீஸ் கார்னர் said...

அக்கா என்ன இது, அப்படியே நம்ம பதிவு கொஞ்சம் எட்டி பாருங்க, அப்படியே அங்கயும் எதாவது பாட்டு எடுத்து விடுங்க

Boston Bala said...

கலக்கல் சாய்ஸ்!!!

நாகை சிவா said...

பாட்டு நல்லா இருக்கே.... :)

Last 25 songs posted in Thenkinnam