Sunday, December 2, 2007

50. நண்பனே எனது உயிர் நண்பனே..



நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
(நண்பனே..)

ஒரு கிளையில் ஊஞ்சலாடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை ஹேய்.. ஹேய்..
(நண்பனே..)

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வளமே
நமக்கு ஏது பிரித்து பார்க்க
இரண்டு மனமே.. ஹேய்.. ஹேய்..
(நண்பனே..)

படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

1 Comment:

நாகை சிவா said...

இந்த வீக் எண்ட் நட்புக்கு அர்பணித்த மாதிரி நண்பர்கள் பாட்டாக அள்ளி தெளித்து விட்டீர்கள் :)

எஸ்.பி.பி. மலேசிய வாசுதேவனும் சேர்ந்தாலே கலக்கல் தான் :)

Last 25 songs posted in Thenkinnam